உக்ரைன் விமானத்தை தவறுதலாக சுட்டுவீழ்த்தினோம்- ஏற்றுக்கொண்டது ஈரான்

உக்ரைனின் பயணிகள் விமானத்தை தவறுதலாக சுட்டு வீழ்த்தியதை ஈரான் ஏற்றுக்கொண்டுள்ளது.

மனித தவறு நிகழ்ந்துள்ளது என ஈரான் தெரிவித்துள்ளது.

ஈரானின் வெளிவிவகார அமைச்சர் முகமட் ஜாவட் ஜரீவ் இதனை டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

விமானம் விழுந்து நொருங்கிய பின்னர் படையினர் மேற்கொண்ட விசாரணைகளின் மூலம் அமெரிக்கா  சாகசமுயற்சிகளில் ஈடுபட்டிருந்தவேளை ஏற்பட்ட மனிததவறே இந்த விபத்திற்கு காரணம் என்பது தெரியவந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஈரானிய இராணுவம் ஏவுகணையொன்று விமானத்தை தாக்கியதாக தெரிவிக்கும் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளதுடன், உயிரிழந்தவர்களின் உறவினர்களிற்கு அனுதாபங்களையும் வெளியிட்டுள்ளது.

ஈரானின் புரட்சிகர காவல் படையின் மிக முக்கியமான தளத்திற்கு அருகில் குறிப்பிட்ட விமானம் சென்றது என ஈரானிய இராணுவம் தெரிவித்துள்ளது.

இராணுவவிசாரணை இடம்பெறும் குற்றவாளிகள் பொறுப்புக்கூறச்செய்யப்படுவார்கள் என ஈரான் தெரிவித்துள்ளது.