பலியானவர்களின் எண்ணிக்கை 1,523 ஆக உயர்வு

கொவிட் – 19 தொற்றினால் சீனாவில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 523 ஆக உயர்ந்துள்ளது.

கொவிட் 19 தொற்றால் சீனாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 150 பேர் பலியாகியுள்ளனர்.

அவர்களுள் ஆறு சுகாதார பணியாளர்களும் அடங்குவதாக சீன அதிகாரிகள் தெரிவித்துளளார்.

இதேநேரம், சீனாவுக்கு வெளியே மூன்று நாடுகளில் மூன்று பேர் வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

இதற்கமைய, ஹொங்கொங், பிலிப்பைன்ஸ் மற்றும் ஜப்பான் முதலான மூன்று நாடுகளிலும் தலா ஒவ்வொருவர் வீதம் உயிரிப்பு பதிவாகியுள்ளது.

இதேவேளை, உலகளவிய ரீதியாக 66 ஆயிரத்து 901 பேரளவில் கொவிட் 19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

சீனாவுக்கு வெளியே 25 நாடுகளில் 400 க்கும் அதிகமானோர் கொவிட் – 19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்த நிலையில், வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக சீனா உட்பட உலக நாடுகளும், உலக சுகாதார ஸ்தாபனமும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன