சீனாவில் கொரோனா வைரஸ் பரவலை முதன் முறையாக கண்டறிந்த மருத்துவர் Ai Fen, உலக மக்களிடம் இது தொடர்பில் எச்சரிக்க தவறிய தாமே இந்த மரணங்களுக்கு காரணம் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.

குறித்த மருத்துவர் சீன பத்திரிகை ஒன்றிற்கு அளித்திருந்த நேர்காணலில், கொரோனா வைரஸ் பரவலை முதன் முறையாக தாம் கண்டறிந்ததாக வெளிப்படுத்தியுள்ளார்.

Renwu என்ற அந்த பத்திரிகையில் வெளியான இவரது நேர்காணல் உடனடியாக சீன அரசாங்கத்தின் அழுத்தம் காரணமாக நீக்கப்பட்டதுடன்,

மருத்துவர் Ai Fen மீது ஒழுங்கு நடவடிக்கையும் பாய்ந்தது.

ஆனால் இதனால் தாம் அஞ்சப்போவதில்லை என குறிப்பிட்டுள்ள அவர், தாம் கண்டறிந்தவற்றை எங்கே எப்போது வேண்டுமானாலும் விவாதிக்க தயார் என அழுத்தமாக தெரிவித்துள்ளார்.

மேலும் கொரோனா தொடர்பில் முதன் முதலில் கண்டறிந்த தாமே இந்த மரணங்களுக்கு எல்லாம் காரணம் எனவும் அவர் குரிப்பிட்டுள்ளார்.

2003-ல் பரவிய சார்ஸ் கிருமியை ஒத்திருக்கும் இதன் அறிகுறிகள் கண்டிப்பாக மனிதரில் இருந்து மனிதரில் பரவும் என்ற எச்சரிக்கையே, மருத்துவர் Ai Fen மீது சீன அரசாங்கம் வன்மம் கொள்ள காரணமாக அமைந்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் மருத்துவ அறிக்கை ஒன்றை கைப்பற்றிய மருத்துவர் Ai Fen, அதை தமது மருத்துவ கல்லூரி நண்பர்களுக்கு பகிர்ந்துள்ளார்.

அந்த அறிக்கையானது வுஹான் நகரின் அனைத்து மருத்துவர்களையும் சில மணி நேரத்தில் சென்றடைந்தது என கூறும் அவர்,

பல மருத்துவர்கள் அந்த அறிக்கை தொடர்பில் விவாதிக்கவும், அதில் ஒருவரான மருத்துவர் Li Wenliang கொரோனா தொடர்பில் மேலும் பல தகவல்களை திரட்டி வெளியிடத் தொடங்கினார்.

ஆனால் அவரையும் சீன அரசாங்கம் முடக்கியதுடன், இறுதியில் கொரோனா நோய் தாக்கியே அவரும் மரணமடைந்தார்.

இதனிடையே வுஹான் நகரில் இருந்து மாயமான மருத்துவர் Ai Fen தற்போது எங்கிருக்கிறார் என்ற தகவல் இல்லை என்றாலும்,

அவர் சீனாவில் இருந்தே வெளியேற்றப்பட்டிருக்கலாம் அல்லது, வெளி உலகிற்கு தெரியாத சிறைக்குள் அடைபட்டிருக்கலாம் என சமூக வலைதள பக்கங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

மேலும், மருத்துவர் Ai Fen கொரோனா தொடர்பில் பேசிய கருத்துகள் அனைத்தும் தற்போது மொழிபெயர்க்கப்பட்டு இணையத்தில் வலம்வருகிறது.