கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில் டென்மார்க் ஒரு மாத கால மூடலுக்குப் பிறகு சில சிறு வணிகங்களை மீண்டும் திறக்க அனுமதி அளித்துள்ளது.

டென்மார்க்கில் சுமார் 7,000 கொரோனா நோய்த்தொற்று உறுதியானது மற்றும் 321 இறப்புகள் பதிவாகியுள்ளன.

கொரோனா பரவுவதை தடுக்க எல்லைகளை மூடுவது, நீடித்த தனிமைப்படுத்தல்கள் மற்றும் சமூக இடைவெளிகளை அறிமுகப்படுத்துவது என உலக நாடுகள் கடுமையான நடவடிக்கைகள் முன்னெடுத்து வருகிறது.

இந்நிலையில் கடந்த புதன்கிழமை தொற்று விகிதங்கள் சீரான பின்னர் டென்மார்க் ஏற்கனவே சில நர்சரிகள் மற்றும் தொடக்கப் பள்ளிகளை மீண்டும் திறக்க அனுமதித்தது.

தற்போது சிகையலங்கார நிலையங்கள், அழகு நிலையங்கள் மற்றும் ஓட்டுநர் பள்ளிகள் போன்ற சில சிறு வணிகங்களை ஏப்ரல் 20ம் தேதி திறக்க டென்மார்க் அனுமதிக்கும் என்று அரசாங்கம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

முற்றிலும் அவசியமானதை விட ஒரு நாள் கூட வணிகங்களை மூடி வைக்க யாரும் விரும்பவில்லை என்று பிரதமர் மெட் ஃபிரடெரிக்ஸே கூறினார்.

ஆஸ்திரியா மற்றும் ஜேர்மனி உட்பட பல ஐரோப்பிய நாடுகளும் இதேபோன்று தங்கள் ஊரடங்கு நடவடிக்கைகளை தளர்த்துவதாக அறிவித்ததை அடுத்து டென்மார்க் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.

டென்மார்க் அதன் எல்லைகளை மூடி வைத்திருக்கும், மேலும் உணவகங்கள், பார்கள் மற்றும் ஜிம்களில் பிற தடைகள் உள்ளன, அதேபோல் பெரிய பொதுக்கூட்டங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது.