சீனாவில் ஆரம்பித்து தற்போது உலகின் பல நாடுகளிலும் ருத்ரதாண்டவம் ஆடிவருகின்றது கொரோனா.

எனினும் தற்போது சீனாவில் இதன் பாதிப்பு பெருமளவில் குறைந்துள்ளது.

இச் சூழ்நிலையைப் பயன்படுத்தி சீனா பல்வேறு வெளிநாட்டு முதலீடுகளைச் செய்வதில் ஆர்வம் காட்டி வந்தது.

அதேபோன்று மே 6 ரொக்கெட் மாதிரி ஒன்றினை விண்வெளிக்கு அனுப்பி பரிசோதனை முயற்சி ஒன்றினையும் மேற்கொண்டுள்ளது.

விண்வெளி வீரர்களை நிலவிற்கு அனுப்பும் முயற்சியாகவே இப் பரீட்சிப்பு இடம்பெற்றுள்ளது.

Long March 5B எனும் இந்த ரொக்கெட் ஆனது Wenchang ஏவுதளத்திலிருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இதில் இணைக்கப்பட்டுள்ள மீண்டு வரக்கூடிய கப்சூல் (capsule) பகுதியானது எதிர்பார்த்ததைப் போன்று வெற்றிகரமாக ரொக்கெட்டிலிருந்து பிரிந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு நிலவிற்கு விண்வெளி வீரர்களை அனுப்புவதற்கு சீனா எதிர்பார்த்துள்ளமை தெரிந்ததே.