தான்சானிய ஜனாதிபதி ஜான் மகுஃபுலி கிழக்கு ஆபிரிக்க நாட்டை கொரோனா வைரஸ் இல்லாதது என்று அறிவித்தார் என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

தான்சானியாவின் மக்கள் கடவுளுக்கு வழங்கிய பிரார்த்தனைகள் மற்றும் உண்ணாவிரதங்களால் உலகளாவிய தொற்றுநோயான கொரோனாவை வீழ்த்தி வெற்றிபெற்றதாக ஜனாதிபதி ஜான் மகுஃபுலி கூறினார்.

கடவுளுக்கு முதலிடம் கொடுக்கும் ஒரு நாட்டின் தலைவராக இருப்பது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.

கடவுள் தான்சானியாவை நேசிக்கிறார் என்று தான்சானியாவில் உள்ள ஜாம்வி டிவி செய்தி வெளியிட்டுள்ளது.

தான்சானியாவில் பிசாசின் செயல்கள் எப்போதுமே தோற்கடிக்கப்படும், ஏனெனில் தான்சானியர்கள் கடவுளை நேசிக்கிறார்கள், அதனால்தான் கொரோனா கூட கடவுளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது என்று மகுஃபுலி கூறினார்.