வெள்ளை மாளிகையின் உயர் பதவிகளில் மாற்றம் !

4

அமெரிக்க வெள்ளை மாளிகையின் பணியாளர் குழுத்தலைவராக ரொன் கிளைன் (ron klain) தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

மேலும் வெள்ளை மாளிகையின் மிக முக்கிய பதவியாகக் காணப்படும் குறித்த பதவியானது ஜனாதிபதியின் அன்றாடச் செயல்பாடுகளை நிர்வாகம் செய்வதுடன், வெள்ளை மாளிகையின் முழு நிர்வாகமும் பணியாளர் குழுத்தலைவரின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது .

1980 ஆண்டில் இருந்து ஜோ பைடனுடன் ரொன் கிளைன் பணியாற்றி வருகின்றார் என்பதோடு பராக் ஒபாமா ஜனாதிபதியாக இருந்தபோது வெள்ளை மாளிகையின் மூத்த உதவியாளராகவும் இருந்துள்ளமை குறிப்பிடதக்கது .