லிபிய கடற்பகுதியில் இடம்பெற்ற கப்பல் விபத்து – பலர் உயிரிழப்பு

4

லிபியாவின் Khoms கடற்பகுதியில் இடம்பெற்ற கப்பல் விபத்தில் 74 பேர் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச புலம்பெயந்தோருக்கான அமைப்பு தெரிவித்துள்ளது.

குறித்த கப்பலில் 120 இற்கும் மேற்பட்டவர்கள் பயணித்துள்ள நிலையில், 47 பேரை லிபிய கடலோர காவல்படை மற்றும் மீனவர்களினால் மீட்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன .