பழிக்குப் பழி… டிரம்ப் அரசாங்கம் வைத்த குறி: மொத்தமாக முடித்த இஸ்ரேல்

85

அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்று, அல் கொய்தாவின் மூத்த தலைவரை இஸ்ரேலின் மொசாத் அமைப்பு படுகொலை செய்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

அல் கொய்தாவின் மூத்த தலைவரான அபு முஹம்மது அல் மஸ்ரி இஸ்ரேலின் மொசாத் படைகளால் கொல்லப்பட்டுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 7 ஆம் திகதி தெஹ்ரான் வீதிகளில் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு மர்ம நபர்களால் அபு முஹம்மது அல் மஸ்ரி உள்ளிட்ட மூவர் கொல்லப்பட்டதாக சர்வதேச பத்திரிகை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

கென்யா மற்றும் தான்சானியாவில் உள்ள அமெரிக்க தூதரகங்களில் அல் கொய்தா அமைப்பு முன்னெடுத்த தாக்குதல்களில் இவரின் பங்கு வெளியான நிலையில், இவரின் தலைக்கு அமெரிக்கா குறி வைத்து வந்தது.

ஆகஸ்ட் 1998-ல் அமெரிக்க தூதரகங்கள் மீது முன்னெடுக்கப்பட்ட அந்த வெடிகுண்டு தாக்குதலில் சுமார் 200-கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

இதனையடுத்து அபு முஹம்மது அல் மஸ்ரியை உயிருடன் பிடிகூடுபவர்களுக்கு 10 மில்லியன் டொலர் வெகுமதி வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்தது.

மட்டுமின்றி 2008 ஆம் ஆண்டு, அமெரிக்காவிலோ, அல்லது கூட்டணி நாடுகளிலோ அல்-மஸ்ரி காவலில் இல்லை எனவும் அமெரிக்கா அறிவித்தது.

அல்-மஸ்ரி விவகாரம் தொடர்பில் டிரம்ப் நிர்வாகம் முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையிலேயே இஸ்ரேலின் மொசாத் களமிறங்கி, சாதித்ததாக கூறப்படுகிறது.

இருப்பினும், அல்-மஸ்ரி படுகொலை தொடர்பில் இதுவரை அல் கொய்தா உறுதியான தகவலை வெளியிடவில்லை.

மேலும், அல்-மஸ்ரியின் படுகொலையை ஈரானிய அதிகாரிகள் மூடி மறைத்ததாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

அல்-மஸ்ரி கடந்த 2003 முதல் ஈரானின் காவலில் இருப்பதாக அமெரிக்க உளவுத்துறைக்கு தகவல் கிடைத்திருந்ததாக கூறப்படுகிறது.

மேலும், 2015 முதல் தெஹ்ரானில் சர்வ சாதாரணமாக அல்-மஸ்ரி நடமாடியதாகவும் அமெரிக்க அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், ஆகஸ்ட் 7 ஆம் திகதி, தமது மகளுடனும் ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்ஸா பின்லேடனும் வாகனம் ஒன்றில் தமது குடியிருப்புக்கு செல்லும் வழியில், தாக்குதலுக்கு இலக்கானதாகவும், இதில் மூவரும் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.