விபத்தில் சிக்கி ஜோ பைடன் காயம்

117

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள ஜோ பைடன், விபத்தில் சிக்கி காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக தெரிவாகியுள்ளவர் குடியரசுக் கட்சியின் ஜோ பைடன்.

78 வயதான ஜோ பைடன் தமது வளர்ப்பு நாயான மேஜருடன் நேரத்தை செலவிட்டு வந்த நிலையில், தடுக்கி விழுந்ததில், அவரது கணுக்கால் சுளுக்கியதாக கூறப்படுகிறது.

உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை பகல் நடந்த இச்சம்பவத்தை அடுத்து, உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர், தற்போது சிகிச்சைக்கு பின்னர் குடியிருப்புக்கு திரும்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜனவரி 20 ஆம் திகதி அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக்கொண்டு ஜோ பைடன் குடும்பம் வெள்ளை மாளிகையில் குடியேறியதும், அவர்களுடனையே மேஜர் என்கிற இந்த நாயும் வெள்ளை மாளிகையில் தங்க வைக்கப்படும்.

மேலும், கடந்த நூறாண்டு அமெரிக்க வரலாற்றில், ஜனாதிபதி மாளிகைக்கு செல்லப் பிராணி என எதையும் அழைத்துச் செல்லாத முதல் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் என கூறப்படுகிறது.