வளர்க்கப்பட்ட இறைச்சிகளை அங்கீகரிக்கும் முதல் நாடு

14

உலகத்திலேயே முதல் முறையாக ஆய்வகங்களில் இறைச்சியை உற்பத்தி செய்து விற்பனை செய்ய சிங்கப்பூர் அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந் நிலையில் ஆய்வகங்களிலே ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி மற்றும் , மாட்டிறைச்சியை தயாரிக்க சிங்கப்பூர் அரசு முடிவெடுத்துள்ளதோடு விலங்குகளின் உடல் திசுக்களிலிருந்து இருந்து செல்கள் பிரிக்கப்பட்டு அதன் மூலம் ஆய்வகங்களில் இறைச்சி தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் முதல் கட்டமாக சிங்கப்பூரில் ‘ஜஸ்ட் ஈட்’ என்ற அமெரிக்க நிறுவனத்துக்கு செயற்கை இறைச்சியை தயாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது .