தடுப்பூசி வாங்குவதில் குளறுபடி… குழப்பத்தில் ஐரோப்பிய நாடுகள்: இன்னும் ஓராண்டு ஸ்தம்பிக்கும் அபாயம்

14

கொரோனா தடுப்பூசி வாங்கும் திட்டத்தில் ஏற்பட்ட குளறுபடியால், ஐரோப்பிய நாடுகள் மேலும் ஓராண்டு ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளுக்குள் ஸ்தம்பிக்கும் என கூறப்படுகிறது.

ஐரோப்பிய கண்டத்தில் முதல் நாடாக கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி அளித்து தற்போது அரை மில்லியன் மக்களுக்கு அதை செலுத்தியும் முடித்துள்ளது பிரித்தானிய நிர்வாகம்.

ஆனால், ஜேர்மனி, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து போன்ற ஐரோப்பிய நாடுகள் இன்னமும் தடுப்பூசி கொள்முதலை தொடங்கவே இல்லை.

மட்டுமின்றி, கொரோனா தடுப்பூசி வாங்குவதில் தங்களின் விரிவான திட்டத்தில் இணைந்து கொள்ள மறுத்த பிரித்தானியாவை முக்கிய ஐரோப்பிய தலைவர்கள் சாடினர்.

இந்த நிலையில் தற்போது ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பல, தங்கள் நாட்டிற்கு தடுப்பூசி கிடைப்பதில் தாமதமாவதால் அச்சத்தில் உறைந்துள்ளன.

பிரித்தானியா நிர்வாகம் தமது துரித நடவடிக்கைகளால் முதற்கட்டத்திற்கு போதுமான தடுப்பூசிகளை கைப்பற்றியுள்ள நிலையில் பெல்ஜியம் தாங்கள் ஏமாற்றப்பட்டதாக குமுறியுள்ளது.

இதனிடையே, ஐரோப்பிய ஒன்றியம் தடுப்பூசி விவகாரத்தில் மெத்தனமாக செயல்படுவதாக கூறி, ஜேர்மன் சேன்ஸலர் தன்னிச்சையான முடிவெடுக்கலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

பிரித்தானியா நிர்வாகம் ஏற்கனவே பல ஆயிரம் மக்களுக்கு தடுப்பூசியை அளித்துள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றியம் பைசர் நிறுவன தடுப்பூசிக்கு நேற்று தான் அனுமதியே வழங்கியுள்ளது.

ஆனால், அது பொதுமக்களுக்கு அளிக்கப்பட மேலும் ஒரு வார காலம் ஆகலாம் என கூறப்படுகிறது.

இதனிடையே பிரான்ஸ் அரசாங்கத்தால், 300 மில்லியன் டோஸ்களுக்கு பைசர் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டிருந்த பெல்ஜியம் தற்போது 200 மில்லியன் டோஸ்களுடன் ஒதுங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

ஆனால் பிரான்ஸ் நிறுவனத்திடம் இருந்து 300 மில்லியன் டோஸ்களுக்கு பெல்ஜியம் மேற்கொண்ட ஒப்பந்தம் ஒரு காரணம் என கூறப்பட்டாலும், பிரான்ஸ் நிறுவனம் அடுத்த ஆண்டு மட்டுமே பெல்ஜியத்திற்கு 300 மில்லியன் டோஸ் தடுப்பூசியை வழங்க முடியும் என அறிவித்துள்ளது.

தடுப்பூசி வாங்குவது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் மெத்தனமாக செயல்படுவதால், முக்கிய நாடுகள் பல மேலும் ஓராண்டு காலம் கட்டுப்பாடுகளுக்குள் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.