Homeசினிமாவிஜய்யின் கடைசி படம்: ‘ஜனநாயகன்’ படப்பிடிப்பு தீவிரம்!

விஜய்யின் கடைசி படம்: ‘ஜனநாயகன்’ படப்பிடிப்பு தீவிரம்!

நடிகர் விஜய்யின் திரைப்பயணத்தில் இறுதி படமாக அறிவிக்கப்பட்டுள்ள ‘ஜனநாயகன்’, ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. எச். வினோத் இயக்கத்தில், விஜய், பூஜா ஹெட்ச், பாலிவுட் நடிகர் பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெறுகிறது.

விஜய் அரசியல் களத்தில் இறங்கிய பின்னர் இப்படம் தயாராவதால், இது முழுக்க முழுக்க அரசியல் கதைக்களத்தை மையமாகக் கொண்டிருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

இந்திய அளவில் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமான KVN இப்படத்தை தயாரிக்கிறது. விஜய்யின் படம் என்றாலே வியாபாரத்தில் பெரும் போட்டி இருக்கும். அவரது கடைசி படம் என்றால் சொல்லவே தேவையில்லை. ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமைக்கான வியாபாரம் சூடுபிடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை நெட்பிளிக்ஸ் கைப்பற்ற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

விஜய்யின் திரைப்பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் இப்படம், அவரது அரசியல் பயணத்திற்கு ஒரு வலுவான தொடக்கமாக அமையுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

RELATED ARTICLES

Most Popular