இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC), பெற்றோல் விலைகளை குறைப்பதாக அறிவித்துள்ளது. இதன்படி, பெற்றோல் ஒக்டேன் 92 மற்றும் ஒக்டேன் 95 ஆகியவற்றின் விலை லீட்டருக்கு 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.
புதிய விலைகள் இன்று (மார்ச் 31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரவுள்ளதாக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இதர எரிபொருட்களின் விலைகளில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.