பிரித்தானிய அரசு சமீபத்தில் ஜெனரல் சவேந்திர சில்வா உள்ளிட்ட நான்கு இலங்கையர்களுக்கு தடைகள் விதித்த முடிவு தொடர்பாக, அமைச்சரவைக்கு பரிந்துரைகளுடன் அறிக்கை சமர்ப்பிக்க, அமைச்சர்களைக் கொண்ட குழு ஒன்றை நியமிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான டொக்டர் நாலிந்த ஜயதிஸ்ஸ, பிரித்தானிய அரசின் இந்த தடை முடிவு அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதாக தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, இவ்விடயம் தொடர்பான உண்மைகளை ஆராய்ந்து, மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து பரிந்துரைகளுடன் அறிக்கை சமர்ப்பிக்க, அமைச்சர்களைக் கொண்ட குழு ஒன்றை நியமிக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இக்குழுவிற்கு, தேவையான துறைசார் நிபுணத்துவம் கொண்ட அதிகாரிகள் அல்லது அறிவுத்திறனாளர்களின் சேவைகளை பெறுவதற்கான அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவில் பின்வரும் அமைச்சர்கள் உள்ளடங்குவர்:
• வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் – விஜித ஹேரத்
• நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் – ஹர்ஷன நாணயக்கார
• பாதுகாப்பு பிரதி அமைச்சர் – அருண ஜயசேகர