இலங்கையில் கடந்த திங்கட்கிழமையுடன் (மார்ச் 1) ஒப்பிடுகையில், தங்கத்தின் விலை இன்று (ஏப்ரல் 04) மேலும் அதிகரித்துள்ளது. உலகளாவிய வர்த்தகப் போர் மற்றும் புவிசார் அரசியல் அபாயங்கள் குறித்து அதிகரித்து வரும் கவலைகள், பாதுகாப்பான சொத்தாக கருதப்படும் தங்கத்தின் விலையை உயர்த்தியுள்ளன.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் பரஸ்பர வரிக் கொள்கையால் சந்தைகளில் ஏற்பட்ட பரவலான விற்பனை அழுத்தம், தங்க வர்த்தகர்களை பாதித்து, விலைமதிப்பு உலோகத்தின் விலையை புதிய உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.
கொழும்பு செட்டியார் தெருவின் தங்க விலைகளின்படி, இன்று 24 கரட் தங்கம் ஒரு பவுணின் விலை 246,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுணின் விலை 227,000 ரூபாவாகவும் உள்ளதாக அகில இலங்கை நகைகள் விற்பனையாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆர். பாலசுப்ரமணியம் தெரிவித்தார்.
கடந்த திங்கட்கிழமை (மார்ச் 1) 24 கரட் தங்கம் ஒரு பவுணின் விலை 245,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் 226,000 ரூபாவாகவும் இருந்தது.
சர்வதேச சந்தையில், ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இன்று 3,103.98 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.