Homeவெளிநாடுஇந்தியாஇந்திய இராணுவம் நவீனமயமாகிறது: 155 எம்.எம் பீரங்கிகள் வாங்க திட்டம்!

இந்திய இராணுவம் நவீனமயமாகிறது: 155 எம்.எம் பீரங்கிகள் வாங்க திட்டம்!

இந்திய இராணுவம் நவீனமயமாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது, இந்திய இராணுவத்தால் 105 மற்றும் 130 எம்.எம் ரக பீரங்கிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இதேவேளை, 155 எம்.எம் ரக பீரங்கிகள் (ஏடிஏஜிஸ்) வாங்குவதற்கு பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் அளித்திருந்த நிலையில், இந்திய பாதுகாப்புத்துறைக்கான அமைச்சரவை குழுவும் இதற்கு உத்தியோகபூர்வ ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதன்படி, அடுத்த இரண்டு ஆண்டுகளில் 307 நவீன பீரங்கிகளும், அவற்றை இழுத்துச் செல்ல 327 வாகனங்களும் வாங்கப்படவுள்ளன. இந்த பீரங்கிகள் துல்லியமான தாக்குதல்களை நடத்தி பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் திறன் கொண்டவை என்பதால், இவற்றை வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது.

இந்த புதிய பீரங்கிகள் சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளுக்கு அனுப்பப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம், தனியார் நிறுவனங்களுடன் இணைந்து இந்த பீரங்கிகளை தயாரிக்கின்றது.

இத்தயாரிப்பில் 65 சதவீத பாகங்கள் உள்நாட்டில் தயாரிக்கப்படவுள்ளன. இதனால், உள்நாட்டு நிறுவனங்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

RELATED ARTICLES

Most Popular