மேல் மாகாணம், சபரகமுவ மாகாணம், மத்திய மாகாணம், வடமேல் மாகாணம், வட மாகாணம் மற்றும் அநுராதபுரம், காலி, மாத்தறை மாவட்டங்களில் பிற்பகல் 2:00 மணிக்குப் பின்னர் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
மேல் மாகாணம், சபரகமுவ மாகாணம், வடமேல் மாகாணம் மற்றும் காலி, மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளில் 75 மி.மீ.க்கு மேல் சற்று பலத்த மழை பெய்யலாம் எனவும் அது குறிப்பிட்டுள்ளது.
கிழக்கு மாகாணம், ஊவா மாகாணம் மற்றும் ஹம்பாந்தோட்டை, பொலன்னறுவை மாவட்டங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.
இதேவேளை, மேல் மாகாணம், சபரகமுவ மாகாணம், மத்திய மாகாணம், ஊவா மாகாணம் மற்றும் காலி, மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளில் காலையில் பனிமூட்டமான நிலை ஏற்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, இடியுடன் கூடிய மழையின் போது உருவாகும் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதற்கு பொதுமக்கள் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வானிலை அவதான நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.