Homeசினிமாஐ.பி.எல். தொடக்கம்: சென்னையில் அனிருத் கச்சேரி!

ஐ.பி.எல். தொடக்கம்: சென்னையில் அனிருத் கச்சேரி!

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் விரைவில் தொடங்கவுள்ளதால், கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இந்த சீசனின் தொடக்க விழா நாளை (22) கொல்கத்தாவில் நடைபெறவுள்ளது.

முதல் போட்டியாக, சென்னையில் வரும் ஞாயிற்றுக்கிழமை (23) சென்னை சூப்பர் கிங்ஸ் (சி.எஸ்.கே.) மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்கு முன்னதாக, சென்னை ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் இசையமைப்பாளர் அனிருத் கச்சேரி நடைபெறவுள்ளது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மாலை 6.30 முதல் 6.50 வரை அனிருத் தனது இசை நிகழ்ச்சியை வழங்கவுள்ளார். இது ரசிகர்களுக்கு போட்டியை மேலும் சிறப்பாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

RELATED ARTICLES

Most Popular