HomeவெளிநாடுChinaசீனா பதிலடி: அமெரிக்க பொருட்களுக்கு 34% வரி, அரிய பொருட்கள் ஏற்றுமதிக்கு தடை

சீனா பதிலடி: அமெரிக்க பொருட்களுக்கு 34% வரி, அரிய பொருட்கள் ஏற்றுமதிக்கு தடை

சீனா, வெள்ளிக்கிழமை அன்று, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விதித்த பரந்தளவு வரிகளுக்கு எதிர் நடவடிக்கையாக, அமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரிகள் மற்றும் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

சீன நிதி அமைச்சு, ஏப்ரல் 10 முதல் அனைத்து அமெரிக்க பொருட்களுக்கும் 34 சதவீத கூடுதல் வரிகளை விதிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதனுடன், சமாரியம், கடோலினியம், டெர்பியம், டிஸ்ப்ரோசியம், லுட்டீசியம், ஸ்காண்டியம், இட்ரியம் உள்ளிட்ட நடுத்தர மற்றும் கனமான அரிய புவி உலோகங்களை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்வதற்கு ஏப்ரல் 4 முதல் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது பீஜிங்.

“சட்டப்படி தொடர்புடைய பொருட்களுக்கு ஏற்றுமதி கட்டுப்பாடுகளை அமல்படுத்துவதன் நோக்கம், தேசிய பாதுகாப்பு மற்றும் நலன்களை சிறப்பாக பாதுகாப்பதும், பரவல் தடுப்பு போன்ற சர்வதேச கடமைகளை நிறைவேற்றுவதும் ஆகும்,” என சீன வர்த்தக அமைச்சு தனது அறிக்கையில் கூறியுள்ளது.

மேலும், வெளிநாட்டு நிறுவனங்களுக்கு எதிராக தண்டனை நடவடிக்கைகளை எடுக்க அனுமதிக்கும் “நம்பகமற்ற நிறுவனங்கள்” பட்டியலில் 11 நிறுவனங்களை சீனா சேர்த்துள்ளது.

RELATED ARTICLES

Most Popular