அல்லியன்ஸ் இலங்கை நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. சொப்ட்லோஜிக் லைப் இன்சூரன்ஸ் பிஎல்சி (Softlogic Life Insurance PLC) நிறுவனம், அல்லியன்ஸ் லைப் இன்சூரன்ஸ் லங்கா லிமிடெட் (Allianz Life Insurance Lanka Limited) நிறுவனத்தை வாங்குவதற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாங்குதல் சட்ட ஒப்புதலுக்கு உட்பட்டது.
இது தொடர்பில் அல்லியன்ஸ் இலங்கை மேலாண்மைக் குழு விளக்கமளித்துள்ளதாவது, “இந்த மாற்றம் எமது வாடிக்கையாளர்களின் பாலிசிகள் அல்லது சேவைகளில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. அல்லியன்ஸ் லைப் இன்சூரன்ஸ் லங்கா லிமிடெட் வழக்கம்போல தொடர்ந்து இயங்கும். உங்கள் காப்புறுதி கவரேஜ் அல்லது பலன்களில் எந்த மாற்றமும் இருக்காது” என உறுதியளிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த வாங்குதல் அல்லியன்ஸ் இன்சூரன்ஸ் லங்கா லிமிடெட் (Allianz Insurance Lanka Limited) நிறுவனத்தின் உரிமை அல்லது செயல்பாடுகளை பாதிக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் அல்லியன்ஸ் நிறுவனத்தின் பொது இன்சூரன்ஸ் வணிகம், நாட்டிலுள்ள மிகவும் புகழ்பெற்ற பொது இன்சூரன்ஸ் வழங்குநர்களில் ஒருவராக தொடர்ந்து செயல்படும் எனவும் அல்லியன்ஸ் இலங்கை மேலாண்மைக் குழு குறிப்பிட்டுள்ளது.
“எங்கள்மீது நீங்கள் வைத்திருக்கும் தொடர்ச்சியான நம்பிக்கைக்கு நன்றி” எனவும் அல்லியன்ஸ் இலங்கை மேலாண்மைக் குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு உறுதியளிக்கும் வகையில் அமைந்துள்ளதுடன், நிறுவனத்தின் எதிர்கால திட்டங்களை தெளிவுபடுத்தியுள்ளது.