Homeஇலங்கைஅனுராதபுர வைத்தியர் துஷ்பிரயோக வழக்கு: சந்தேகநபர் இன்று அடையாள அணிவகுப்புக்கு

அனுராதபுர வைத்தியர் துஷ்பிரயோக வழக்கு: சந்தேகநபர் இன்று அடையாள அணிவகுப்புக்கு

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகிய சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை இன்று (28) அனுராதபுர மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது.

இந்த வழக்கில் பிரதான சந்தேகநபரை அடையாளம் காண்பதற்காக இன்று நீதிமன்றத்தில் அடையாள அணிவகுப்பு நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் வைத்தியரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, சந்தேகநபரை அடையாளம் காண்பதற்காக இரண்டு தடவைகள் அடையாள அணிவகுப்பு திட்டமிடப்பட்டிருந்த போதிலும், அந்த சந்தர்ப்பங்களில் பாதிக்கப்பட்ட வைத்தியர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவம் கடந்த மார்ச் மாதம் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பதிவாகியதை அடுத்து, சந்தேகநபரான 34 வயதுடைய நிலந்த மந்துரங்க ரத்நாயக்க என்பவர் கல்நெவ பிரதேசத்தில் காவல் துறை மற்றும் சிறப்பு அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டார். இவர் முன்னாள் இராணுவ வீரராவார்.

இன்றைய விசாரணையின் போது, சந்தேகநபரை அடையாளம் காணும் நடவடிக்கை முடிவடைந்த பின்னர், வழக்கு தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து நீதிமன்றம் தீர்மானிக்கவுள்ளது. இதற்கிடையில், வைத்தியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரி அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) தொடர்ந்து அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றது.

RELATED ARTICLES

Most Popular