நாட்டின் முன்னணி திரவ பெற்றோலிய காஸ் (LP) விநியோக நிறுவனங்களில் ஒன்றான லாஃப்ஸ் காஸ் பிஎல்சி (Laugfs Gas PLC), தமது உள்நாட்டு காஸ் சிலிண்டர்களின் விலையை உயர்த்துவதற்கு தீர்மானித்துள்ளது.
இதன்படி, 12.5 கிலோ காஸ் சிலிண்டரின் விலை 420 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 4,100 ரூபாவாகவும், 5 கிலோ சிலிண்டரின் விலை 168 ரூபாவால் உயர்த்தப்பட்டு 1,645 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த விலை உயர்வு, உலக சந்தையில் காஸ் விலை ஏற்றம் மற்றும் உள்ளூர் பொருளாதார நிலைமைகளை கருத்தில் கொண்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.