வடமத்திய மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித் மற்றும் அவரது தனிப்பட்ட செயலாளர் சாந்தி சந்திரசேன ஆகியோருக்கு, ஊழல் குற்றச்சாட்டுகளில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து, கொழும்பு உயர் நீதிமன்றம் 16 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்துள்ளது.
இதனுடன், குற்றவாளிகள் இருவருக்கும் தலா 200,000 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
லஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு (CIABOC) முன்னாள் முதலமைச்சருக்கு எதிராக தாக்கல் செய்த வழக்கை விசாரித்த பின்னரே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.
வடமத்திய மாகாண முதலமைச்சராக பதவி வகித்த காலத்தில், எஸ்.எம். ரஞ்சித் 2,080,500 ரூபா பெறுமதியான எரிபொருள் கொடுப்பனவுகளை சட்டவிரோதமாக பெற்று ஊழல் செய்ததாக லஞ்ச ஆணைக்குழு இவ்வழக்கை தாக்கல் செய்திருந்தது.