இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) வெளியிட்ட தகவலின்படி, 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் மொத்தம் 229,298 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
இதன்மூலம், 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் (ஜனவரி – மார்ச்) சுற்றுலாப் பயணிகளின் மொத்த எண்ணிக்கை 722,276 ஆக உயர்ந்துள்ளது. மார்ச் மாதம் முழுவதும், வாராந்த சுற்றுலாப் பயணிகளின் வருகை 50,000ஐ தாண்டியதுடன், மார்ச் 28 ஆம் திகதி ஒரே நாளில் 8,619 பேர் நாட்டிற்கு வந்ததாகவும் பதிவாகியுள்ளது. இது மாதத்தின் அதிகபட்ச ஒரு நாள் வருகையாகும்.
மார்ச் மாதத்தில் அதிகளவு சுற்றுலாப் பயணிகளை அனுப்பிய நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. மொத்த வருகையில் 17.1 சதவீதமாக, 39,212 பேர் இந்தியாவிலிருந்து வந்துள்ளனர்.
மற்ற முக்கிய நாடுகளிலிருந்து வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை பின்வருமாறு:
• ரஷ்யா – 29,177 பேர்
• ஐக்கிய இராச்சியம் – 22,447 பேர்
• ஜேர்மனி – 17,918 பேர்
இலங்கையின் சுற்றுலாத் துறை, 2025 ஆம் ஆண்டு 3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இலக்கை நோக்கி வலுவாக முன்னேறி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.