Homeஇலங்கைபாட்டில் குடிநீருக்கு புதிய விலை: ஏப்ரல் 1 முதல் அமுல்

பாட்டில் குடிநீருக்கு புதிய விலை: ஏப்ரல் 1 முதல் அமுல்

போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீருக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்கும் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை நுகர்வோர் விவகார அதிகார சபை வெளியிட்டுள்ளது.

அதன்படி, 500-999 மில்லி லீட்டர் அளவு கொண்ட பாட்டிலுக்கு 70 ரூபாவும், 1-1,499 லீட்டருக்கு 100 ரூபாவும், 1.5-1,999 லீட்டருக்கு 130 ரூபாவும், 2-2,499 லீட்டருக்கு 160 ரூபாவும், 5-6,999 லீட்டருக்கு 350 ரூபாவும் என புதிய விலைகள் திருத்தப்பட்டுள்ளன.

இந்த வர்த்தமானி அறிவிப்பின் படி, மேற்குறிப்பிட்ட விலைகள் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Most Popular